காவல் நிலைய கழிவறையில் கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞர் - பரபரப்பு

காவல் நிலைய கழிவறையில் கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞர் - பரபரப்பு

சென்னை யானை கவுனி காவல் நிலையத்தில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியாசர்பாடியைச் சேர்ந்த அமரேந்திரன் என்பவரை, நேற்று யானை கவுனி போலீசார் கைது செய்து விசாரித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை காவல் நிலையக் கழிவறையில் இருந்த கூர்மையான பொருளால் கழுத்தை அறுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரை மீட்ட போலீசார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதற்கிடையே, அமரேந்திரன் மீது பொய் வழக்குப் போட போலீசார் முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டி, அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

#Police #Chennai #Vysarpadi #Hospital #Thanthitv

X