Karur | போதையில் கிணற்றில் விழுந்த இளைஞர்.. தூக்கும் போது கடுப்பான தீயணைப்பு வீரர்கள்..
கரூர் அருகே மது போதையில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞரை தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி போராடி மீட்டனர். குளித்தலை கீழவெளியூரை சேர்ந்த கௌதம் மது அருந்திவிட்டு வந்தபோது கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர், இளைஞரை கயிறு கட்டி மேலே தூக்கிய போது, அவர் மதுபோதையில் ஒத்துழைக்காததால் அவரை லேசாக அடித்து பத்திரமாக மீட்டனர்.
Next Story
