புரோட்டா தராததால் இளைஞர் அடித்துக் கொலை

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே நள்ளிரவில் உணவகத்தில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை அடித்து கொலை செய்துவிட்டு தலைமறைவான மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புரோட்டா தராததால் இளைஞர் அடித்துக் கொலை
Published on
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே நள்ளிரவில் உணவகத்தில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை அடித்து கொலை செய்துவிட்டு தலைமறைவான மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சின்னப்ப நாயக்கர் பாளையத்தை சேர்ந்த வேலழகன், நள்ளிரவில் மது அருந்திவிட்டு லட்சுமணன் என்பவர் நடத்தி வரும் உணவகத்துக்கு சென்று, பரோட்டா கேட்டுள்ளார். அப்போது, கடை உரிமையாளருக்கும், வேலழகனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். சிறிது தூரம் சென்ற வேலழகனை வழிமறித்து, லட்சுமணனும் அவரது மகனும் மரக்கட்டையால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே வேலழகன் உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான லட்சுமணனையும், அவரது மகனையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com