ஜிம்மில் இளைஞர் மாரடைப்பால் மரணம்

ஜிம்மில் இளைஞர் மாரடைப்பால் மரணம்
Published on

ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு திடீர் மரணம்.

ஹரியானா மாநிலம் பரிதாபத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த 37 வயது இளைஞர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பங்கஜ் ஷர்மா என்ற அந்த இளைஞர் செக்டர்-09 வது பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடம் ஒன்றில் தோள்களுக்கான Pull-up பயிற்சியை மேற்கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென உடற்பயிற்சி கூடத்திலேயே பின்னோக்கி கீழே சாய்ந்து மயங்கி விழுந்தார்.

இதனைக் கண்டதும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர் அவருக்கு சிபிஆர் உள்ளிட்ட முதலுதவி சிகிச்சைகளை அளித்து காப்பாற்ற முயன்ற போது அந்த முயற்சி பலனளிக்கவில்லை.

X

Thanthi TV
www.thanthitv.com