செல்போன் தொலைந்த விரக்தியில் இளைஞர் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே செல்போன் தொலைந்த விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீரான்குளம் பகுதியைச் சேர்ந்த வினோத்குமாரின் விலை உயர்ந்த செல்போன் காணாமல் போயுள்ளது. இதனால் உறவினர்கள் திட்டிய நிலையில் விரக்தியில் இருந்த அவர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
