பூனைக்கடியால் பாதிக்கப்பட்ட இளைஞர் மருத்துவமனையில் தற்கொலை
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்ற இளைஞர், மூன்று மாதங்களுக்கு முன்பு பூனைக்கடி ஏற்பட்டு அதை அலட்சியம் செய்ததால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பாலமுருகன் பாதிப்பு அதிகமான நிலையில், அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு ரேபிஸ் சிகிச்சை அறையில் தனியாக வைக்கபட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக மருத்துவமனை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
Next Story
