பெண் குழந்தையை வீசிச்சென்ற இளம்பெண் : திருமணம் நின்றதால் நடந்த கொடூரம்

போரூரை அடுத்த காரம்பாக்கத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு, பெண் குழந்தையை வீசி சென்ற இளம்பெண்ணை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
பெண் குழந்தையை வீசிச்சென்ற இளம்பெண் : திருமணம் நின்றதால் நடந்த கொடூரம்
Published on
போரூரை அடுத்த காரம்பாக்கத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு, பெண் குழந்தையை வீசி சென்ற இளம்பெண்ணை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அந்த பெண்ணுக்கும், அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நபருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கருவுற்றிருக்கிறார். இந்நிலையில், திடீரென அந்த பெண்ணின் தாய் உயிரிழந்த‌தால் திருமணம் நின்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 10 ஆம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்த‌தை அடுத்து, குழந்தையை கவனிக்க முடியாத‌தால், வீசி சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் அந்த இளம்பெண்ணிற்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com