Thiruchendur | திருச்செந்தூர் முருகன் கோயிலில் காணாமல் போன சிறுமி - கண்ணின் இமைபோல காத்த விநாயகர்
திருச்செந்தூர் கோயிலில் காணாமல் போன 8 வயது பெண் குழந்தை வர்ஷினி கார்த்திகாவை, கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த திருச்செந்தூர் போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சிவசுப்பிரமணியன் குடும்பத்துடன் கோயிலுக்கு வந்திருந்த போது, அவர்களது வர்ஷினி கார்த்திகா என்ற சிறுமி காணாமல் போனார். பிறகு, சிறுமியின் போட்டோ உள்ளிட்ட விவரங்களை சேகரித்த போலீசார், சிறுமியை தேடிவந்தனர். இதைத்தொடர்ந்து, தூண்டிகை விநாயகர் கோயில் பகுதியில் இருந்த சிறுமி மீட்கப்பட்டு அதன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, குழந்தையைக் கண்ட பெற்றோர் பெருமூச்சு விட்டு, கண்ணீருடன் ஆரத்தழுவி மகிழ்ந்தனர்.
Next Story
