தனக்குத் தானே மருந்து செலுத்தி இளம் மருத்துவர் தற்கொலை

x

கொடைக்கானலில் தனக்குத்தானே மருந்து செலுத்தி திண்டுக்கல் வேடச்சந்தூரைச் சேர்ந்த மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 29 வயது மருத்துவர் ஜோஸ்வா சாம்ராஜ், மருத்துவ படிப்பை பிலிப்பைன்ஸில் முடித்துவிட்டு அனஸ்தீசியா பிரிவில் 2ம் ஆண்டு முதுகலை மருத்துவ படிப்பை சேலம் காவேரி மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்துள்ளார்... இவர் ஆன்லைன் விளையாட்டிற்காக தனது குடும்பத்தினருடைய நகை மற்றும் தனியார் நிறுவனத்திடம் லோன் என 7 லட்ச ரூபாய் வரை பெற்றுள்ளார்... இந்நிலையில், திடீரென மாயமான ஜோஸ்வா குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகாரளித்திருந்தனர். இந் நிலையில், அவர்

கொடைக்கானல் பூம்பாறை மலை கிராமத்திற்கு செல்லும் சாலையில் காரில் தனக்குத்தானே மருந்தினை செலுத்தி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. உடலைக் கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்