

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்ட பட்டதாரிகள் 409 பேர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களாக பதிவு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன், வழக்கறிஞர் தொழிலுக்கு ஆங்கிலம் முக்கியம் என்றும், தாய் மொழி நேசிப்பு என்பது, பிறமொழி புறக்கணிப்பு அல்ல என்றும் குறிப்பிட்டார்.
போலி வழக்கறிஞர்களால், வழக்குகள், காவல் நிலைய கட்டப்பஞ்சாயத்தில் முடிவதாக உயர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் கூறினார். வழக்கறிஞர்கள் சமூகத்தின் பொறியாளர் மற்றும் தணிக்கையாளர் என நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்தார். புதிதாக பதிவு செய்துள்ள வழக்கறிஞர்கள் காவல் நிலையங்களுக்கு செல்லக் கூடாது என நீதிபதி கிருபாகரன் கேட்டுக்கொண்டார். பார்கவுன்சில் தலைவர் உள்ளிட்ட ஏராளமானோர் இளம் வழக்கறிஞர்களை பாராட்டினர்.