Yogi Adityanath Biopic | சட்ட சிக்கலில் யோகி ஆதித்யநாத்தின் பயோபிக்... கோர்ட் அதிரடி உத்தரவு

x

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படத்தின், தணிக்கை சான்றிதழ் வழங்க தாமதம் ஆன நிலையில், மத்திய திரைப்பட தணிக்கை குழு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கையைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம், “அஜேய்ய்: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் ஏ யோகி Ajey: The Untold Story Of A Yogi. இப்படம் ஆகஸ்ட் 1ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில், தயாரிப்பாளர் தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் திரைப்படத்திற்கான சான்றிதழ் வழங்க மத்திய திரைப்பட தணிக்கை குழு பொறுப்பேற்க வேண்டும் எனவும், இந்த மனு மீது பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்