கண்ட பேருண்டாசனம் யோகாவில் உலக சாதனை : 45 நிமிடங்கள் செய்து அசத்திய 8 ஆம் வகுப்பு சிறுவன்

நாகை மாவட்டம், மயிலாடுதுறையைச் சேர்ந்த 8 வகுப்பு படிக்கும் மாணவர் யோகாசனத்தில் உலக சாதனை படைத்துள்ளார்.
கண்ட பேருண்டாசனம் யோகாவில் உலக சாதனை : 45 நிமிடங்கள் செய்து அசத்திய 8 ஆம் வகுப்பு சிறுவன்
Published on
நாகை மாவட்டம், மயிலாடுதுறையைச் சேர்ந்த 8 வகுப்பு படிக்கும் மாணவர் யோகாசனத்தில் உலக சாதனை படைத்துள்ளார். இங்குள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர் மிஷாம், கண்ட பேருண்டாசனம் என்கிற யோகாவை 45 நிமிடங்கள் செய்து அசத்தினார். இந்த சாதனைக்கான சான்றிதழை நோபல் வேர்ல்டு ரெக்கார்டு நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். இதற்கு முன்னர் இந்த ஆசனத்தை 15 நிமிடங்கள் நிகழ்த்தியதே உலக சாதனையாக இருந்தது. சாதனை படைத்த மாணவன் மிஷாமை, தருமபுரம் ஆதீனம் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக சுவாமிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com