ஏற்காட்டில் மருத்துவம் பார்த்த பூ வியாபாரி கைது

பூ வியாபாரியிடம் மருத்துவம் பார்த்த விவரம் தெரிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்காட்டில் மருத்துவம் பார்த்த பூ வியாபாரி கைது
Published on
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாரமங்களம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கேளயூரில் நேற்று சிறப்பு மருத்துவக் குழுவினர் சென்றுள்ளனர். ராஜேந்திரன் என்பவர் மருத்துவம் பார்ப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அவரை தேடி மருத்துவ குழுவினர் சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ராஜேந்திரனை தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அ​ழைத்து சென்றுள்ளனர். ஆய்வாளர் ஆனந்தன் நடத்திய விசாரணையில், ராஜேந்திரன் பூ வியாபாரி என்பதும், தற்காலிகமாக இந்த தொழிலை செய்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். பூ வியாபாரியிடம் மருத்துவம் பார்த்த விவரம் தெரிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com