கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனையை சேர்ந்த ஷோபா என்பவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர் கோமா நிலைக்கு சென்ற நிலையில், இழப்பீடு கோரி அவரது மகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மாநில நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்டவரின் கணவருக்கு 18 புள்ளி 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும்,அந்த தொகைக்கு 2001-ல் இருந்து 9 சதவீத வட்டி கணக்கிட்டு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையை, 3 மாதத்தில் வழங்க வேண்டும் என குலசேகரம் கூட்டுறவு மருத்துவனை நிர்வாகத்துக்கு நீதிபதி மற்றும் உறுப்பினர் உத்தரவிட்டுள்ளனர்.