புதுச்சேரியை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் நலக்குறைவால் காலமானார். புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரபஞ்சன் மறைவுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.