

திமுக தலைவர் ஸ்டாலின் புள்ளிவிவரங்களை சரியாக எழுதி வைத்துக்கொண்டு குற்றச்சாட்டுகளை கூறவேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 62 சதவீதம் அரசு மருத்துவமனைகளில் பிரசவம் நடைபெற்று வருவதாகவும், தாய் சேய் இறப்பு விகிதம் தமிழகத்தில் தான் குறைவு என்றும் பெருமிதம் தெரிவித்தார்.