பச்சரிசியில் 'அ' எழுதி... - எதிர்காலத்துக்கு அச்சாரம் | Vijayadashami

x

விஜயதசமியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற 'வித்யாரம்பம்' என்னும் எழுத்தறிவித்தல் நிகழ்வின் மூலம், குழந்தைகள் கல்வியை தொடங்கினர்.

திருப்பூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற 'வித்யாரம்பம்' நிகழ்வில், ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். இதில் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு எழுது பொருட்களும், இனிப்புகளும் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரியில் உள்ள ஐயப்பன் கோவிலில் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தங்கம் போன்ற உலோகத்தை தேன் போன்ற தூய்மையான பொருளில் தொட்டு, குழந்தைகளின் நாவில் தமிழ் எழுத்துக்கள், குலதெய்வ பெயர்களை எழுதினர்.

காஞ்சிபுரம் ஹயக்ரீவர் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குழந்தைகளுக்காக சிலேட்டு, பலப்பம் வாங்கி கொடுத்து பெற்றோர்கள் பூஜை செய்தனர். இதைத்தொடர்ந்து உயிர் எழுத்துக்களின் முதன்மையான 'அ' எழுத்தை நெல்லில் எழுத வைத்து, குழந்தைகளுக்கு கல்வியை தொடங்கினர்.

சேலம் குரங்குச்சாவடியில் உள்ள ஐயப்பன் கோயிலில், பொதுமக்கள் தங்கள் குழந்தைகளின் விரலை பிடித்து, பச்சரிசியில் ஓம் என்றும் அம்மா, அப்பா என்றும் எழுதவைத்து கல்வியை தொடங்கி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்