அடடா இந்த `BUSல' இவ்ளோ வசதியா - சென்னையை சுற்றிபார்க்க இனி மின்சார பேருந்து
முதற்கட்டமாக சென்னை மாநகரில் 207 கோடி மதிப்பீட்டில் 120 புதிய மின்சார பேருந்து சேவையை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று வியாசர்பாடி பணிமனையில் திறந்து வைத்தார்
சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்குவதற்கு வியாசர்பாடி, பெரும்பாக்கம், சென்ட்ரல், பூந்தமல்லி, தண்டையார்பேட்டை ஆகிய 5 பணிமனைகளில் சார்ஜிங் பாயின்ட்கள் அமைத்து மின்சார பேருந்துகள் இயக்கபட உள்ளது ..
மின்சார பேருந்துகள் பொருத்தமட்டில் 240 கி. வாட் சார்ஜ் செய்தால் 45 நிமிடங்களில் 2 பேருந்துகளுக்கு முழுவதுமாக சார்ஜ் செய்ய முடியும் .. 200 கிமீ வரை பயணம் செய்ய முடியும் வகையில் சார்ஜிங் பாயிண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளது .
தாழ்த்தள பேருந்துகளில் இருப்பது போல மாற்றுத்திறனாளிகள் ஏறுவதற்கான சாய்தள வசதி , தனி இருக்கை , சிசிடிவி கண்காணிப்பு , ஜிபிஎஸ் உதவியோடு அடுத்த பேருந்து நிறுத்தத்தை தெரிந்து கொள்ளும் வசதி , வேக தடைகளுக்கு ஏற்வாறு பேருந்து உயரத்தை உயர்த்தும் வசதி , சீட் பெல்ட் , சார்ஜ் மற்றும் அவசக்கால பொத்தான்கள் , ஓட்டுனர் எளிதில் பேருந்துகளை இயக்க பல்வேறு வசதிகள் இந்த மின்சார பேருந்துகளிலும் இடம் பெற்றுள்ளன ..
