Gouri Kishan | Kushboo | உடல் எடை பற்றி அவங்க குடும்பப் பெண்களிடம் கேட்டால் ஏற்பார்களா? - குஷ்பூ
உடல் எடை குறித்து கேள்வி எழுப்பிய யூடியூபரிடம் நடிகை கௌரி கிஷன் வாக்குவாத்தில் ஈடுபட்ட நிலையில், அவருக்கு நடிகை குஷ்பூ ஆதரவு தெரிவித்துள்ளார். ஒரு பெண்ணின் எடை அவரது தனிப்பட்ட விவகாரம் என்றும், அதைப் பற்றி கேள்வி எழுப்புவது மிகப்பெரிய அவமானம் என்றும் குஷ்பு குறிப்பிட்டுள்ளார். தன்னம்பிக்கையுடன் உறுதியாய் நின்று, பதிலளித்த கவுரி கிஷனை பாராட்டியுள்ள குஷ்பு, நாங்கள் அவர்களின் குடும்பப் பெண்களைப் பற்றி இதே கேள்வியை கேட்டால், அதையும் சரியாகக் கருதுவார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மரியாதை எதிர்பார்க்கிறவர்கள், முதலில் அதை வழங்க கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடுள்ளார்.
Next Story
