பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் 'பகல்பத்து' நிகழ்ச்சி : ராமர் அலங்காரத்தில் பெருமாள் - பக்தர்கள் வழிபாடு

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள பரிமள ரங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 7ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

பகல்பத்து உற்சவ விழாவில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்

108 திவ்ய தேசங்களில் ஒன்றான நெல்லை மாவட்டம் நாங்குனேரி வானுமாமலை பெருமாள் கோவிலில்,மார்கழி மாதம் நடைபெறும் பகல் பத்து உற்சவம் கடந்த 8 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. விழாவின் 5 ஆம் நாளான நேற்று தெய்வநாயகப் பெருமாளுக்கு சுவாமி நம்மாழ்வார் புளிய மரத்தடியில அமா்ந்த திருக்கோலம் அலங்காரம் செய்யப்பட்டது. நாதமுனிகள் மற்றும் திருப்பாணாழ்வார் ஆகியோர் பெருமாளை பாடும்படி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தாயார் மற்றும் ஆண்டாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. வானுமாமலை ஜீயா் சுவாமிகள் மற்றும் பிரபந்த கோஷ்டியினரால் திவ்யபிரபந்தம் பாடப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com