ஆசையாக வாங்கிய பர்கரில் நெளிந்து ஓடிய புழுக்கள் - ஆவடி பிரபல ஹோட்டலில் இப்படியா? - அதிர்ச்சி
பர்கரில் நெளிந்த புழு... வாடிக்கையாளர் அதிர்ச்சி..
சென்னை ஆவடி அடுத்த பருத்திப்பட்டில் பிரபல உணவகத்தில் வாங்கிய பர்கரில் நெளிந்த புழுவால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்து சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார். அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வனிதா என்பவர், பருத்திப்பட்டில் உள்ள பிரபல உணவகத்திற்கு அழைத்துச் சென்று தனது குழந்தைகளுக்கு சிக்கன் பர்கர் வாங்கி கொடுத்துள்ளார். அப்போது, பர்கரில் புழுக்கள் உயிருடன் நெளிந்ததை பார்த்து தாய் வனிதாவிடம் சிறுமிகள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக வனிதா அங்கிருந்த ஊழியர்களை கேட்டபோது அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இரண்டு சிறுமிகளையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற வனிதா. உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்துள்ளார்.
Next Story
