

உலக மன நல தினத்தையொட்டி, அரசு கீழ்பாக்கம் மன நல மருத்துவமனையில் சிகிச்சைபெறும் 20 நோயாளிகள் மெட்ரோ ரயிலில் அழைத்துச் செல்லப்பட்டனர். கீழ்ப்பாக்கத்தில் இருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரயிலில் இவர்கள் பயணம் செய்தனர். நோயாளிகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில், அரசு மனநல மருத்துவமனை நிர்வாகம் இந்த ஏற்பாட்டை செய்திருந்தது.