உலக தடகள போட்டியில் 3 தங்கப் பதக்கம் வென்ற வீரருக்கு உற்சாக வரவேற்பு

உலக தடகள போட்டியில், 3 தங்கப் பதக்கங்களை வென்ற வீரர் ஆனந்தனுக்கு, சொந்த ஊரான கும்பகோணத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலக தடகள போட்டியில் 3 தங்கப் பதக்கம் வென்ற வீரருக்கு உற்சாக வரவேற்பு
Published on

உலக தடகள போட்டியில், 3 தங்கப் பதக்கங்களை வென்ற வீரர் ஆனந்தனுக்கு, சொந்த ஊரான கும்பகோணத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராணுவத்தினருக்கான உலக தடகளப் போட்டி, சீனாவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கும்பகோணத்தைச் சேர்ந்த ஆனந்தன் குணசேகரன், 3 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். போட்டியில் பங்கேற்று விட்டு, கும்பகோணம் வந்த ஆனந்தனுக்கு, பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மகுடம் சூட்டி உற்சாகமான வரவேற்றனர். பின்னர், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அமர வைக்கப்பட்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட ஆனந்தனுக்கு, அவர் படித்த பள்ளியில், பாராட்டு விழா நடத்தப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com