"8 மாதம் முன்னாடியே உழைக்கும் எடப்பாடி" SM சுகுமார் தொண்டர்களுக்கு உத்தரவு
"மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் 19-ஆம் தேதி, ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அவரை வரவேற்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டை அடுத்த திமிரியில் நடைபெற்றது. இதில், அதிமுக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது, தேர்தலுக்கு 8 மாதங்களுக்கு முன்பாகவே தமிழகத்தில் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள மகத்தான தலைவர் எடப்பாடி பழனிசாமி என்று அவர் புகழாரம் சூட்டினார். வெற்றியை குறிக்கோளாக கொண்டு அயராது உழைக்கும் எடப்பாடி பழனிசாமியை மனதில் கொண்டு அதிமுக தொண்டர்கள் ஒருமித்த உணர்வோடு, தேர்தல் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
