Samsung | Kanchipuram | சாம்சங் தொழிலாளர்கள் பணிநீக்கம் - குடும்பங்களுடன் வீதியில் இறங்கி போராட்டம்

தொழிலாளர்கள் பணிநீக்கம் - குடும்பங்களுடன் சாலை மறியல் போராட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார்சத்திரத்தில், சாம்சங் நிறுவனத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட 27 தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிஐடியு தொழிற்சங்கத்தினர் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். காந்தி சிலையிலிருந்து தலைமைச் செயலகம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ள முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்து மறியல் செய்ததால் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவரையும் போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்கவைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com