ஓடும் ரயிலை மறித்து தொழிலாளர்கள் ஆவேச முழக்கம் - பரபரப்பு காட்சி
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி, நாகையில் சரக்கு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாய விரோத கொள்கைகளை கண்டித்து இன்று இந்தியா முழுவதும் இடதுசாரி அமைப்புகள், தொழிலாளர் சங்கங்கள், விவசாய சங்கங்கள் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் கீழ்வேளூரில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க துணைத் தலைவர் லாசர் தலைமையில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் திருச்சியில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற சரக்கு ரயிலை கீழ்வேளூர் ரயில் நிலையத்தில் மறித்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
