ஓடும் ரயிலில் இருந்து தொழிலாளி கீழே தள்ளி படுகொலை - தென்காசியில் அதிர்ச்சி
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே ஓடும் ரயிலில் இருந்து தொழிலாளி ஒருவர் கீழே தள்ளி விட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலக்காடு-தூத்துக்குடி இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் பொதுப்பெட்டியில் பயணித்த நபரை, ஒரு கும்பல் கீழே தள்ளி விட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சக பயணிகள் அளித்த தகவலின் படி வந்த ரயில்வே போலீசார், புனலூர் ரயில் நிலையம் அருகே கிடந்த சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். ரயிலில் ஏற்பட்ட தகராறில், தூத்துக்குடி சண்முகபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமாரை, தென்காசியை சேர்ந்த 7 பேர் கொண்டு தள்ளி விட்டு கொலை செய்தது தெரியவந்தது.
Next Story
