"பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சென்னையில் சரிவு" - சென்னை காவல் கூடுதல் ஆணையர் தினகரன்

டெல்லி, மும்பையை காட்டிலும் சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் குறைந்து வருவதாக சென்னை காவல் கூடுதல் ஆணையர் தினகரன் தெரிவித்துள்ளார்.
"பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சென்னையில் சரிவு" - சென்னை காவல் கூடுதல் ஆணையர் தினகரன்
Published on

டெல்லி, மும்பையை காட்டிலும் சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் குறைந்து வருவதாக சென்னை காவல் கூடுதல் ஆணையர் தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை பூந்தமல்லி அருகே, தனியார் கல்லூரியில் காவலன் செயலியை அறிமுகம் செய்து வைத்து பேசிய அவர் இதனை தெரிவித்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மும்பையில் 5 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 670 வழக்குகளே பதிவாகியுள்ளது எனவும் காவல் கூடுதல் ஆணையர் தினகரன்

தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com