பெண்கள் பாதுகாப்பு - இனி 181-ஐ அழைக்கலாம் : 24 மணி நேர புதிய சேவை இன்று தொடக்கம்

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
பெண்கள் பாதுகாப்பு - இனி 181-ஐ அழைக்கலாம் : 24 மணி நேர புதிய சேவை இன்று தொடக்கம்
Published on

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை தொடங்கி வைக்கிறார். மத்திய அரசு அறிமுகப்படுத்திய இந்த சேவை, டெல்லி,குஜராத்தை தொடர்ந்து தமிழகத்திலும் செயல்படுத்தப்பபடவுள்ளது. இந்த தொலைபேசி சேவை அம்பத்தூரில் உள்ள அம்மா கால் செண்டர் மையத்தில் இருந்து செயல்படுத்தப்பட உள்ளது. குடும்ப வன்முறை, பாலியல் தொல்லைக்கு உளவியல் ரீதியான உதவிக்கு 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால் அதற்குரிய ஆலோசனை வழங்கப்படும். சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள 24 மணி நேர சேவையை முதலமைச்சர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்.

X

Thanthi TV
www.thanthitv.com