மகளிர் உரிமைத் தொகை திட்டம் - இம்மாதம் 14-ம் தேதியே வங்கி கணக்கில் பணத்தை செலுத்த திட்டம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை, இம்மாதம் 14 ஆம் தேதியே வங்கியில் செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை கடந்த மாதம் 15 ஆம் தேதி, முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி பயனாளிகளின் வங்கி கணக்கில், பணம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இம்மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், 14 ஆம் தேதி வங்கி கணக்கில் பணத்தை செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com