வயலில் வேலை பார்த்த பெண்கள் திடீரென கதறியதால் பரபரப்பு... நொடிப்பொழுதில் அதிர்ச்சி சம்பவம்
#ariyalur #hospital வயலில் வேலை பார்த்த பெண்கள் திடீரென கதறியதால் பரபரப்பு... நொடிப்பொழுதில் அதிர்ச்சி சம்பவம் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வயலில் களை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களை கதண்டுகள் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த பார்வதி, ஜோதி உள்ளிட்ட 8 பெண்கள், நல்லநாயகபுரம் கிராமத்தில் உள்ள மக்காச்சோள வயலில் களை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செடி, கொடிகளுக்கு இடையே இருந்து வெளியேறிய விஷக்கதண்டுகள், பெண்களை விரட்டி விரட்டி கொட்டி உள்ளது. வலி தாங்க முடியாமல் பெண்கள் அலறி ஓடிய நிலையில், சிலர் மயக்கமடைந்தனர். தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் 8 பேரும் செந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
