மிரட்டும் பைனான்ஸ் ஊழியர்களால் கண்ணீர் விட்டு கதறும் பெண்கள் | Tenkasi

x

தென்காசி மாவட்டம் கடையம் அருகே, கடன் நிலுவைத் தொகையை கேட்டு தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் பெண்களிடம் அவதூறாக பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. கீழகடையத்தை சேர்ந்த பெண்கள், பல்வேறு பைனான்ஸ் மூலமாக கடன் பெற்று பணத்தை திரும்ப செலுத்தி வந்தனர். தொடர்ந்து சூழ்நிலை காரணமாக கடன் நிலுவைத் தொகையை செலுத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் 5-க்கும் மேற்பட்ட பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் பெண்ணின் வீட்டிற்கு சென்று அவதூறாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சுமார் 16 பைனான்ஸ் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கடையம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.இதனிடையே, நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கி சிக்கித் தவிப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் புகார் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்