வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே உஷார் - சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
சென்னை மடிப்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மளிகைப் பொருள் டெலிவரி ஊழியரை போலீசார் கைது செய்தனர். குபேரன் நகரில் வசிக்கும் அந்த பெண், செல்போன் செயலியில் மளிகை பொருட்களை ஆர்டர் செய்திருந்தார். அந்த பொருட்களை கொண்டு வந்து கொடுத்த டெலிவரி ஊழியர், வீட்டில் அந்த பெண் தனியாக இருப்பதை அறிந்து, அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சலிட்டதால், டெலிவரி ஊழியர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண், முதலில் டெலிவரி நிறுவனத்திற்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார், மயிலாடுதுறையைச் சேர்ந்த கோபிநாத் என்பவரை கைது செய்தனர்.
Next Story
