

சிதம்பரம் சுற்றுப்பகுதியில் காணாமல் போன இரு பெண்களை ஒரு வருடத்திற்கு பிறகு மீட்ட போலீசார், அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பரங்கிப்பேட்டையை சேர்ந்த வினோஸ்வரி மற்றும் சின்ன குமட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி ஆகியோர் கடந்த ஆண்டு காணாமல் போனார்கள்.இது குறித்து பெற்றோர் புகாரை அடுத்து, தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், வினோஸ்வரி, பாலச்சந்திரன் என்பவருடன் சென்னையிலும், ராஜேஸ்வரி குறிஞ்சிபாடியிலும் வசித்து வசித்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களை மீட்ட போலீசார், அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இதில் வினோஸ்வரி என்பவருக்கு 3 மாத குழந்தை இருந்தது குறிப்பிடத்தக்கது.