சென்னையில் பாஜக நிர்வாகிகளுக்கு எதிராக கொந்தளித்த பெண்கள்
நிலத்தை ஆக்கிரமித்து பாஜகவினர் மிரட்டல் - பெண்கள் சாலை மறியல்
சென்னை கோட்டூர்புரம் பகுதியில் பாஜக பிரமுகர்கள், தங்களது காலி நிலத்தை ஆக்கிரமித்து வேலி அமைத்ததாகவும், அதை தடுத்த தங்களையும் தாக்கியதாக கூறி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், கோட்டூர்புரம் சிக்னலில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், சம்பந்தபட்ட நபர்களிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தை அடுத்து, மறியலை முடித்து கொண்டு பெண்கள் புறப்பட்டு சென்றனர்.
Next Story
