

சென்னை அயனாவரத்தை சேர்ந்த அம்பிகா, புதுப்பேட்டை ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். காவல்துறை வாகனங்களில் எரிபொருள் நிரப்பும் அவர், வழக்கம் போல் இன்று காலை பணிக்கு வந்துள்ளார். அப்போது அம்பிகாவை, உயர் அதிகாரி ஒருவர் தவறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அம்பிகா எலிமருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கி விழுந்த அம்பிகா, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.