பெண் அளித்த தகவல்கள்.. அனைத்து உண்மைகளும் அம்பலம்.. காவலர் அதிரடி கைது

x

திருமணம் செய்வதாக கூறி காதலித்த பெண்ணை ஏமாற்ற முயன்ற கடலூரைச் சேர்ந்த காவலர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் பகுதியைச் சேர்ந்த காவலர் சம்பத், நெல்லையை சேர்ந்த 28 வயது பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, கடந்த 5 ஆண்டுகளாக உல்லாசம் அனுபவித்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அப்பெண் கர்ப்பம் தரிக்கவே, சம்பத்தின் வற்புறுத்தலால் கரு கலைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே சம்பத் வேறொரு பெண்ணை திருமணம் செய்யவுள்ளதாக முடிவெடுத்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் கடலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். தொடர்ந்து பெண் அளித்த தகவல்கள் அனைத்து உண்மை என தெரியவந்ததை அடுத்து காவலர் சம்பத்தை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்