விழுப்புரத்தை அலறவிட்ட பெண் சடலம்.. முக்கிய ஸ்பாட்டில் வீசிச்சென்றது யார்?

x

விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே 45 வயது மதிக்கத்தக்க பெண்ணை கொலை செய்து, சடலத்தை சாலையோர பள்ளத்தில் வீசிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஓமாந்தூர் ராமசாமி மண்டபம் எதிரே 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கிடப்பதாக கிளியனூர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த பெண்ணின் முகம் மற்றும் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவ் வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களை வரவழைத்த போலீஸார், பல்வேறு தடயங்களை சேகரித்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

சாலையோர பள்ளத்தில் பெண்ணின் சடலம் வீசப்பட்ட சம்பவனும் கிளியனூர் சுற்றுவட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்