வாடகை வீட்டில் அழுகி கிடந்த பெண் சடலம்.. சென்னையில் ஷாக்!

x

சென்னை கொளத்தூரில் உள்ள வீட்டில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் வசித்து வரும் கணேசமூர்த்தி என்பவரது மனைவி சரஸ்வதி கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு கொளத்தூர் பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் சரஸ்வதியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தினர் கணவருக்கு தகவல் தெரிவித்த நிலையில், கணேசமூர்த்தி வீட்டிற்கு வந்து பார்த்த போது சரஸ்வதி இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து சென்ற போலீசார் சரஸ்வதியின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்