இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து - பெண் உதவி காவல் ஆய்வாளர் உயிரிழப்பு...

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே இரு சக்கர வாகனம் மீது, கன ரக லாரி மோதிய விபத்தில், பெண் உதவி காவல் ஆய்வாளர் உயிரிழந்தார்.
இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து - பெண் உதவி காவல் ஆய்வாளர் உயிரிழப்பு...
Published on

சென்னை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு துறையில் பணிபுரியும், பெண் உதவி ஆய்வாளர் மாங்குயில், பணி நிமித்தமாக வாலாஜாபாத்திலிருந்து படப்பை நோக்கி, இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, சொரப்பணசேரி என்ற இடத்தில், லாரியின் முன் சக்கரத்தில் சிக்கி மாங்குயில் உயிரிழந்தார். விபத்து குறித்து, தகவலறிந்த போலீசார் உதவி காவல் ஆய்வாளர் மாங்குயிலின், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com