வங்கி வேலை வாங்கி தருவதாக பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டல்

வங்கியில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி இளம்பெண்ணை பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்த நபர்களை போலீசார் கைது செய்தனர்.
வங்கி வேலை வாங்கி தருவதாக பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டல்
Published on
வங்கியில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி இளம்பெண்ணை பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்த நபர்களை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்த வசந்த் குமார், கேரளாவில் பணிபுரிந்துள்ளார். அவர், அனுப்பும் பணத்தை அவரது மனைவி விஜயலட்சுமி வங்கியில் கணக்கு தொடங்கி சேமித்து வந்துள்ளார். அப்போது வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி, ஊழியர்கள் சிலர் விஜயலட்சுமியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பாக அவரது கணவர் வசந்த் குமார், மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் ஆதாரங்களுடன் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், வங்கி துணை மேலாளர் உள்ளிட்ட 2 பேரை கைது செய்தனர். 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com