கணவருக்கு இரண்டாவது திருமணம் - ஆத்திரத்தில் மாமனாரை தீயிட்டு கொளுத்திய முதல் மனைவி...

கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரமடைந்த முதல் மனைவி, மாமனாரை தீ வைத்து எரித்துக் கொன்றதால் கைதானார்.
கணவருக்கு இரண்டாவது திருமணம் - ஆத்திரத்தில் மாமனாரை தீயிட்டு கொளுத்திய முதல் மனைவி...
Published on
திருவள்ளூர் மாவட்டம் நெமிலி கிராமத்தை சேர்ந்த சபாபதி என்பவரின் மகன் பிரபாகரன், 6 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை சேர்ந்த காயத்ரி என்பவ​ரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், சபாபதி தனது மகனுக்கு திண்டிவனத்தை சேர்ந்த காயத்திரி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முதல் மனைவி, தனது தாயாருடன் சென்று சபாபதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, சபாபதி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததில், சிகிச்சை பலனின்றி சபாபதி நேற்று உயிரிழந்தார். இதையடுத்த, சபாபதி அளித்த வாக்குமூலம் அடிப்படையில், பிரபாகரனின் முதல் மனைவி காயத்திரி, அவரது தாயார் கலைவாணி ஆகியோரை போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com