புல் அறுத்துக் கொண்டிருந்த பெண்.. சவுக்கு தோப்புக்குள் நடந்த பயங்கரம்

x

ஜெயம்கொண்டம் அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் படுகாயம் அடைந்த பெண், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அரியலூர் மாவட்டம், ஆலத்திப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி என்ற பெண், சவுக்கு தோப்பு பகுதிக்குள் கால்நடைக்கு புல் அறுத்துக் கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு காட்டுப்பன்றி தாக்கியதில், அப்பெண் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். அதில், அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில், தொடர்கதையாகி வரும் இந்த சம்பவத்தில் மீன் சுருட்டி, ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுப் பன்றியை விரட்ட வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்