நண்பருடன் பிறந்த நாள் கொண்டாட பெண் சொன்ன பொய் - இப்படியும் கூட பொய் சொல்வார்களா என பயணிகள் வேதனை

கொரோனா உள்ளதாக கூறி பேருந்தை விட்டு கீழே இறங்கி சென்ற பெண்ணால் பரபரப்பு உருவானது.
நண்பருடன் பிறந்த நாள் கொண்டாட பெண் சொன்ன பொய் - இப்படியும் கூட பொய் சொல்வார்களா என பயணிகள் வேதனை
Published on
சென்னையில் இருந்து கோவை சென்ற சொகுசு பேருந்தில் சுஜிதா என்ற பெண் பயணித்துள்ளார். மேல்மருவத்தூர் வரும் பொழுது தமக்கு கொரோனா உள்ளதாக கூறி, பேருந்தில் இருந்து இறங்கியவர், பின்னால் வந்த காரில் ஏறி சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்தில் வந்தவர்கள் தங்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும்படி கூறி நடத்துநரிடம் தகராறு செய்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், நண்பர்கள் உடன் பிறந்த நாள் விழா கொண்டாட பொய் சொல்லி பேருந்தை நிறுத்தி இறங்கி சென்றது தெரிய வந்துள்ளது. போலீசாரின் சமரசத்தை தொடர்ந்து, கோவை நோக்கி பேருந்து புறப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com