Mayiladuthurai Latest News| கணவர் இறந்த 4 மாதங்களில் பெண் படுகொலை.. நீதி கேட்டு கதறும் சொந்தங்கள்

கணவர் இறந்த 4 மாதங்களில் பெண் படுகொலை.. நீதி கேட்டு கதறும் சொந்தங்கள்

#mayiladuthuraidistrictnews #husbandwife மயிலாடுதுறை மாவட்டம் வாணதிராஜபுரம் பகுதியை சேர்ந்த வளர்மதி என்ற பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவர் இறந்து 4 மாதங்களான நிலையில், டீக்கடையில் வேலை பார்த்து வந்த வளர்மதி நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொலை தொடர்பாக விக்ரமகுத்தாலத்தைச் சேர்ந்த மகேந்திரனை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் வளர்மதியுடன் மகேந்திரனுக்கு பழக்கம் இருந்த‌தாகவும், கருத்து வேறுபாடு காரணமாக மகேந்திரன் வளர்மதியை கொலை செய்த‌தாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, வளர்மதியின் உடலை வாங்க மறுத்து, நீதி கிடைக்க வேண்டும் என்றும் குடும்பத்திற்கு அரசு உதவி வழங்க வேண்டும் என்றும் அவரது தாயும் உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X