லிவிங் டு கெதரில் இருந்த பெண் ஐடி ஊழியர் தற்கொலை

x

லிவிங் டு கெதரில் இருந்த பெண் ஐடி ஊழியர் தற்கொலை

சென்னை கொடுங்கையூரில் லிவிங் டு கெதரில் காதலனுடன் வாழ்ந்து வந்த ஐடி பெண் ஊழியர் தற்கொலை

பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரிடம் இருந்த நகைகள் காணவில்லை என பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார்

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இருதரப்பிடம் தீவிர விசாரணை

நகைகளை காணவில் லை என தாய் காவல் நிலையத்தில் புகார். கொடுங்கையூர் போலீ சார் விசாரணை

சென்னை திருவெற்றியூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ் கர் வயது 58. இவருக்கு திருமணமாகி வரலட்சுமி வயது 46 என்ற மனைவி யும் நித்யா வயது 26 என்ற மகளும், தமிழ்செல்வன் வயது 25 என்ற மகனும் உள்ளனர். இதில் நித்யா அம்பத்தூரில் உள்ள ஐடி கம்பெனியில் கடந்த ஐந்து வருடங்களாக வேலை செய்து வருகிறார்.

நித்தியா ஆடம்பர வாழ்க் கைக்கு ஆசைப்பட்டு கடந்த எட்டு மாதங்களாக வீட்டில் இல்லாமல் வேலை செய் யும் இடத்தில் அரை எடுத்து தங்குகிறேன் எனக் கூறி தனியாக தங்க ஆரம்பித்து ள்ளார். அதன் பிறகு இவரு க்கு கொடுங்கையூரை சேர் ந்த பாலமுருகன் வயது 28 என்ற நபருடன் பழக்கம் ஏற் பட்டு அது காதலாக மாறியு ள்ளது.

பாலமுருகன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு முடித்து விட்டு வேலை தேடி வருகிறார்.

இந்நிலையில் இருவரும் கடந்த எட்டு மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். கடந்த இரண்டு மாதமாக கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி ஏழாவது தெரு வில் வீடு எடுத்து நித்தியா மற்றும் பாலமுருகன் இரு வரும் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்து ள்ளனர்.

நேற்று மதியம் 2 மணி அளவில் நித்தியா எனது பெற்றோர்கள் வீட்டிற்கு வருகிறார்கள் அதனால் நீ வீட்டில் இருக்க வேண்டாம் எனக் கூறி பாலமுருகனை வெளியே அனுப்பி வைத்து ள்ளார்.

நேற்று மாலை 5 மணியள வில் பாலமுருகன் மீண்டும் வீட்டிற்கு வரும்போது வீட் டின் கதவு திறந்த நிலை யில் இரு ந்துள்ளது.

உள்ளே சென்று பார்த்த போது பெயர் தெரியாத நிறைய மாத்திரைகளை உட்கொண்டு நித்யா மய க்க நிலையில் இருந்து ள்ளார்.

உடனடியாக பாலமுருகன் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்துள்ளார். அவர்கள் வந்து நித்தியாவை பரிசோ தனை செய்துவிட்டு இற ந்து விட்டதாக தெரிவித்து ள்ளனர்.

உடனடியாக அக்கம் பக்கத் தினர் இது குறித்து கொடு ங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நித்தியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக ஸ்டான்லி அரசு மரு த்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நித்யா வின் பெற்றோர்களை வர வழைத்து விசாரணை மேற் கொண்டனர்.

விசாரணையில் நித்யா ஒரு பையனோடு பழகி வருவது மட்டுமே தெரியும் என்றும் லிவிங் டுகெதர் முறையில் இருப்பது தெரி யாது என்றும் நித்தியாவி டம் 25 சவரன் நகைகள் இருந்தது அதனை காண வில்லை என நித்யாவின் பெற்றோர் புகார் அளித்து ள்ளனர். பாலமுருகண்டம் விசாரணை மேற்கொண்ட போது நித்யவின் பெற் றோர் அடிக்கடி நித்தியாவி டம் பணம் கேட்டு தொல் லை கொடுத்து வந்ததாக வும். நேற்று மாலை நித்யாவை நீண்ட நேரம் தொடர்பு கொண்டும் நித்தி யா போனை எடுக்காததால் வீட்டிற்கு தான் வந்ததாகவு ம் கூறியுள்ளார்.

தொடர்ந்து கொடுங்கையூர் போலீசார் நித்தியாவின் உடலை பிரேத பரிசோத னைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனு ப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிவில் நித் யா எது போன்ற மாத்திரை களை சாப்பிட்டார் என்றும் அவரது மரணத்தில் வேறு ஏதாவது சந்தேகம் உள்ள தா என்பது குறித்தும் தெரி யவரும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து பாலமுருகன் மற்றும் நித்தியாவின் பெற் றோரிடம் கொடுங்கையூர் போலீசர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்