பிரசவ வலியால் துடித்த பெண் - ஆட்டோவில் பிரசவம் பார்த்த பெண் காவலர்
திருப்பூரில் பிரசவ வலியால் துடித்த வட மாநில பெண்ணுக்கு ஆட்டோவில் பிரசவம் பார்த்த பெண் காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.திருமுருகன்பூண்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றில் கதறியழுதபடி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண் பிரசவத்திற்காக மருத்துவமனை செல்வது தெரியவந்தது. ஆனால் முன்னதாகவே குழந்தை பிரசவமாகவிருந்த சூழலில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் கோகிலா உடனடியாக ஆட்டோவில் ஏறி அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். இதையடுத்து அந்தப் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்து ணெல்லப்பட்டனர். இந்நிலையில் பிரசவம் பார்த்த பெண் காவலரை மாநகர காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டிய நிலையில், இது குறித்து பேசிய காவலர் கோகிலா தான் ஏற்கனவே படித்த நர்சிங் படிப்பு தனக்கு அந்த நேரத்தில் கைகொடுத்ததாக பெருமிதம் தெரிவித்தார்.
