Insta | இன்ஸ்டாவில் இளம்பெண்ணை டார்ச்சர் செய்த `பெண் குரலோன்’ - கணவன் செய்த முரட்டு சம்பவம்

இன்ஸ்டாவில் இளம்பெண்ணை டார்ச்சர் செய்த `பெண் குரலோன்’ - கணவன் செய்த முரட்டு சம்பவம்

சிவகாசியில் இன்ஸ்டாகிராம் மூலம் பெண் குரலில் பேசி இளம்பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்து வந்த இளைஞரை, அவரது கணவரே தந்திரமாக வரவழைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். ​சிவகாசியில் அய்யனார் காலனியை சேர்ந்த பெண்ணிடம், மர்ம நபர் ஒருவர் பெண் குரலில் பேசி தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனை அறிந்த பெண்ணின் கணவர், மனைவியின் செல்போன் மூலம் அந்த நபரை சிவகாசி பேருந்து நிலையத்திற்கு வரவழைத்து கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ​விசாரணையில், அந்த நபர் ராஜபாளையத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பது தெரியவந்த நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்த சிவகாசி டவுன் போலீசார் அவரைச் சிறையில் அடைத்தனர்.

#insta #husbandwife #lovetorture ​#thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com