திடீரென தாக்கிய மின்னல் - அதிர்ச்சியில் மயங்கி விழுந்த பெண்
போச்சம்பள்ளி பகுதியில் பெய்த கனமழை காரணமாக மின்னல் தாக்கி பச்சை தென்னை மரங்கள் எரிந்து சேதமடைந்தன. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. போச்சம்பள்ளி வெற்றிலைக் காரனூர் கிராமத்தில் ராஜா என்பவரது தென்னந்தோப்பில் மின்னல் தாக்கியதில் தென்னை மரங்கள் எரிந்து சேதமடைந்தன. மேலும், அதே பகுதியில் பசுமாடு ஒன்று பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மாட்டின் உரிமையாளர் அம்பிகா என்பவர் மயங்கி விழுந்து காயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
Next Story
