ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
குளித்தலை அருகே காவல்காரப்பாளையத்தில் கணவன் கண்ணெதிரிலேயே மனைவி ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் பெரிய குளத்துபாளையத்தை சேர்ந்த ஷேக்கபூர் என்பவர் தனது மனைவி அஷினாபேகத்துடன் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு ரயிலில் சென்றுள்ளனர். அப்போது அஷினாபேகம் ரயிலில் இருந்து தவறி விழுந்த நிலையில், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அஷினாபேகம் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Next Story
